(புலிகளுக்கு உதவினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய போது)"புலிகளுக்கு எம் ஜி ஆர் நான்கு கோடி பணம் கொடுத்தார் .ஜெயலலிதா புலிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பேசி உள்ளார் இதோ இந்து இதழில் வந்திருக்கிறது "
"ஈழப்ரச்னையையை ராஜீவ் மரணத்திற்கு முன்பு ....பின்பு என்று பிரித்து பார்க்க வேண்டும் "
"ஈழக்கோரிக்கையை ஆதரிக்க மாட்டேன் ஆனால் ஈழம் கிடைத்தால் மகிழ்வேன் "
"ஈழப்ப்ரச்னையில் மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை"
(இதற்கு பிறகு நடுவண் அரசின் இலங்கைக்கான ராணுவ உதவிகள் தொடங்கின என சொல்ல தேவை இல்லை )
இதற்கிடையே ஒருமுறை முரசொலி மாறன் பிரபாகரனை கைது செய்து விசாரித்து தூக்கில் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறி புலிகளுடன் தங்களுக்கு தொடர்பு இல்லை அவர்களுக்கு எங்கள் ஆதரவும் இல்லை என்று மறைமுகமாக உணர்த்தினார் !எங்கள் தீவிரவாத ஆதரவாளர்கள் வைகோ வெளியேறிய போதே போய்விட்டார்கள் என்று ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தி மு க பேச்சாளர் வெற்றிகொண்டான் குறிப்பிட்டார்!
இதன்பிறகே புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழ் செல்வன் மறைந்த போது கவிதாஞ்சலி செய்தார் கருணாநிதி !
"புலிகளின் பணத்தில் பிழைப்பு நடத்து கிறார் நெடுமாறன் "(நெடுமாறன் மருந்துகள் சேகரித்து ஈழத்திற்கு அனுப்பக்கோரி உண்ணாவிரதம் இருந்த காலத்திற்கு பிறகு கருணாநிதி பேசியது )
புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் போய்விடும் என்பதற்காக புலிகளைபுகழ்கிறார்கள் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் என்று ஆர்க்காடு வீராசாமி சிலநாட்களுக்கு முன்பு குறிப்பிட்டார் !
சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி ஜெயலலிதாவின் பணம் வைகோ மூலம் புலிகளுக்கு போகிறது என்று பேசினார் !சட்டசபையில் அன்பழகன் இலங்கைப்ப்ரச்னையில் ஓரளவே தலையிட முடியும் என்று பேசினார் !(அப்போது கருணாநிதி மருத்துவமனையில் இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது )
"நான் பதவி விலகினால் ஈழப்ப்ரச்னை தீர்ந்து விடுமா "
"தமிழக அரசியல்வாதிகளின் தவறான ஆலோசனையை புலிகள் கேட்பதால் ஈழப்ப்ரச்னை தீராமல் இருக்குறது "
"கள்ளத்தோணியில் போய் இங்குள்ளவர்கள் ஈழத்தமிழர்களை காப்பாற்றட்டுமே"
"ஈழத்தமிழர்களுக்காக உயிரைவிடவும் நான் தயார் "(தயவு செய்து சிரிக்காதீர்கள்)
Sunday, April 12, 2009
Subscribe to:
Comments (Atom)